ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் ஓபிஎஸ் என்ன மாடுபிடி வீரரா? – துரைமுருகனின் காமெடி கலாட்டா!

Share this News:

சென்னை (19 பிப் 2020): விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார்.


Share this News:

Leave a Reply