அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா!

Share this News:

அதிராம்பட்டினம் (03 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட திமுக பொருளாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதற்கான அலுவலகம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று (03 மார்ச் 2023) வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் திமுக கொடியினையும் ஏற்றி வைத்தார்.

இதில் அதிராம்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை எஸ்.ஹெச்.அஸ்லம் சிறப்பாக செய்திருந்தார்.


Share this News:

Leave a Reply