சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

Share this News:

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மேல் விசாரனைக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வங்கி விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை தொலைபேசியில் தெரியாத நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும், அத்தகைய தொலைபேசி அழைப்புகள் வந்தால் அதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.


Share this News:

Leave a Reply