ஸ்டாலின் முதல்வராக முடியாது – பகீர் கிளப்பும் காங்கிரஸ் எம்பி!

Share this News:

சென்னை (17 ஜன 2020): திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவிலேயே ஆட்கள் உள்ளனர். என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடப பங்கீட்டில் எற்பட்ட கசப்பின் காரணமாக, ‘கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்படுவதாக’ மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன பிரச்னை. எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. யாரையும் நாங்கள் வெளியே போ என்று சொல்ல மாட்டோம். ஆனால், தானாக போகிறவர்களைப் பிடித்து வைக்கவும் மாட்டோம்,” என்று அதட்டலாக பேசினார். இது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆனது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியான துரைமுருகனின் பேட்டியை டேக் செய்து, ஏன் இந்த ஞானோதயம் வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே வரவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply