குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

Share this News:

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது:

குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர்.

ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச் சேர்ந்த உமர் ஹமீத் ஷேக் மற்றும் இம்தியாஸ் அஹமத் ஷிக்லா, இலாஹிபா சவுரா பகுதியைச் சேர்ந்த ஷாஹீன் பரூக் மற்றும் ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அஹமத் மிர் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு உதவியதாக இஷ்பக் தர் என்ற பயங்கரவாதி அவந்திபோராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply