சென்னை ஷஹீன் பாக் – தொடரும் மூன்றாவது நாள் போராட்டம்!

Share this News:

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசா நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் தடியடி குறித்த தகவல் வேகமாக பரவியதால், தமிழகமெங்கும் நள்ளிரவில் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், முஸ்லிம் இயக்க நிா்வாகிகளை வண்ணாரப்பேட்டையில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவாா்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் என்று பொதுமக்கள் அறிவித்துவிட்டனர். இன்று மூன்றாவது நாளாக சென்னையில் போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை மற்றும் ஒரு ஷஹீன் பாக்காக மாறிக் கொண்டு இருக்கிறது.


Share this News:

Leave a Reply