அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

Share this News:

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால் டெல்லி மேலும் பரபரப்பு அடைந்துள்ளது.

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக பெரும் நெருக்கடியில் உள்ளது. மேலும், “குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அமித் ஷாவின் வேண்டுகோளின் படியே ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளதாக, ஷாஹின் பாக் போராட்டக்களத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply