திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா

Share this News:

திருத்தணி (08 பிப் 2020): திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து காலை, 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தைபூசத்தை ஒட்டி, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.


Share this News:

Leave a Reply