வன்புணர வந்தவனிடமிருந்து பெண் தப்பிக்க உபயோகித்த ஆயுதம் எது தெரியுமா? -அசந்து போவீர்கள்!

Share this News:

பீஜிங் (08 பிப் 2020): சீனாவில் பெண் ஒருவரை வன்புணர வந்தவனிடம் தப்பிக்க பெண் பயன்படுத்திய ஆயுதம் கொரோனா வைரஸ்.

சீனாவில் கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கொள்ளையடிப்பதற்காக அவரது வீட்டிற்குள் ஒருவன் நுழைந்தான், மேலும் அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்,

அவனிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் சாதுர்யமாக யோசித்து பலமாக இருமினார். அத்துடன், வுகான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன்னை தனிமையில் வைத்துள்ளதாகவும் கூறி மேலும் பலமாக இருமி பயமுறுத்தினார்.

இதனை கேட்ட அவன் அங்கு இருந்து  தலைதெறிக்க ஓடியுள்ளான்.  இதனை அடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவனை போலீசார் கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply