மற்றும் ஒரு குஜராத் மாடல் அதிர்ச்சி – பெண்களை நிர்வாணமாக்கி சோதனை!

Share this News:

சூரத் (22 பிப் 2020): குஜராத்தில் மருத்துவமனை ஒன்றின் பணியாளர்களுக்கு உடற்தகுதி சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்கம் தனது புகாரில் கூறி உள்ளதாவது:-

மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்த பெண்கள் சோதனைக்காக அறையில் ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேரையும் குழுவாக நிர்வாணமாக நிற்க வைத்ததுள்ளார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது.

அவர்களது முறை சட்டவிரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானது. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம் என கூறி உள்ளது.

அனைத்து பயிற்சி ஊழியர்களும் தங்கள் பயிற்சி காலம் முடிந்ததும் வேலைக்கான தகுதியை நிரூபிக்க உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குறித்த விசாரணைக்கு சூரத் நகராட்சி ஆணையர் பஞ்சனிதி பானி உத்தரவிட்டு உள்ளார். மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து 15 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.

இந்த குழுவில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி நகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோர் உள்ளனர்.

கட்டாய சோதனைக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், மகளிர் மருத்துவ வார்டில் பெண் ஊழியர்களுக்கு பின்பற்றப்பட்ட முறை முறையற்ற தல்ல எஸ்.எம்.சி ஊழியர் சங்கம் கூறி உள்ளது.


Share this News:

Leave a Reply