தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது – சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

Share this News:

கோழிக்கோடு (05 அக் 2022) : தாயில்லாத உலகத்தில் வாழ்வதை சித்திக் கப்பனால் தாங்க முடியாது என சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா கூறியுள்ளார்.

உத்திர பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் படுகொலையைப் பற்றி தகவல் சேகரிக்கச் செல்லும்போது. செய்தியாளார் சித்திக் கப்பான் உத்திர பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்திக் கப்பன் தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யுஏபிஏ வழக்கில் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும் சித்திக் கப்பன் டெல்லியில் 6 வாரங்கள் தங்கியிருக்க வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஹத்ராஸில் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் முயற்சித்ததாகவும். இதற்காக பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உள்ளிட்ட 4 பேர் நியமிக்கப்பட்டதாகவும் அதற்காக. 1 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி உதவி பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

சித்திக் காப்பனுக்கு ஜாமீன் கிடைத்தும் அமலாக்கத்துறை பதிந்த வழக்கால் மீண்டும் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் சித்திக் காப்பன் உள்ளார். அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று அமலாக்கத்துறையினருக்கு தெரியும். எனினும் அவரை குற்றவாளியாக்கியுள்ளனர் என்று அவரது மனைவி ரைஹானா தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்த முதல் வருடத்தில், சித்திக் கப்பனுக்கு ஒருமுறை மட்டுமே பரோல் வழங்கப்பட்டது. அப்போது தாயை சந்தித்துவிட்டு சென்றவர் தற்போது அவரது தாய் உயிருடன் இல்லை என்பதை எப்படி தாங்கிக் கொள்வார். தாயின் மரணம் குறித்து கப்பனிடம் தெரிவிக்கவில்லை என்றும் ரைஹானா தெரிவித்தார்.

காப்பன் மனம் உடைந்துவிடுவாரோ என்று தாயின் மரணம் மட்டுமல்லாமல் காப்பன் குடும்பத்தில் நடந்த முக்கியமான மரணங்கள் எதையும் சொல்லவில்லை, என்று ரைஹானா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply