சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

Share this News:

புதுடெல்லி (03 அக் 2022): சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை விவகாரங்கள் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடி அரசில் ஒரே முஸ்லீம் முகமான முக்தார் அப்பாஸ் நக்வி, மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அந்த பதவியில் மற்றொரு நபரை மத்திய அரசு நியமிக்கவில்லை.

மத்திய அரசின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள, காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சையத் நசீர் ஹுசைன், “2006-ம் ஆண்டு சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான ஒவ்வொரு வாய்ப்பையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் செயலாளர் சையது தன்வீர் அகமது தெரிவித்தார்.

ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, ஜூலை மாதம் முக்தார் அப்பாஸ் நக்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தற்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தை கூடுதலாக கவனித்து வருகிறார்.


Share this News:

Leave a Reply