பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் கார் விபத்தில் காயம்!

Share this News:

மைசூர் (27 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்ற வாகனம் மைசூரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கடகோலா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. பங்கூரிலிருந்து பந்திப்பூர் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்தபோது பிரஹலாத் மோடி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி மட்டுமே வாகனத்தில் இருந்தனர். அவர்கள் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply