21ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கத்தாருக்கு முதலிடம்!

Share this News:

தோஹா: 21ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியதில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது.

2002 முதல் 2022 வரையிலான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் கத்தார் முதலிடம் பிடித்தது.

இந்த நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 78 சதவீதம் பேர் கத்தாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இரண்டாவது இடம் ஜப்பானும் கொரியாவும் இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியாகும். 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு மூன்றாவது இடம்.

கடந்த முறை ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டக்கு குறைந்த வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த கணக்கெடுப்பை பிபிசி நியூஸ் ஏற்பாடு செய்தது.


Share this News:

Leave a Reply