ரூ 15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக மோடி அமித்ஷா மீது வழக்கு பதிவு!

Share this News:

ராஞ்சி (03 பிப் 2020): ரூ 15 லட்சம் தராமல் பொது மக்களை ஏமாற்றியதாக பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்சா, ஆகியோர் மீது ஹெச்.கே.சிங் என்பவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த வழக்கில், குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தனர் அதனை கொண்டு வந்துவிட்டனர். ஆனால் 15 லட்சம் தருவதாக அறிவித்தனர் அது எங்கே? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

15 லட்சம் விவகாரம் ஏற்கனவே பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் தற்போது இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply