கொரோனா பாதித்த மாநில பேரிடராக கேரளா அறிவிப்பு!

Share this News:

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் தாக்குதலை மாநில பேரிடராக மாநில கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.


Share this News:

Leave a Reply