பயங்கரவாதியே திரும்பிப் போ – பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்!

Share this News:

போபால் (26 டிச 2019): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் போபால் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரை முற்றுகையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் மத்திய பிரதேசம் போபாலுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார் அங்கு குழுமியிருந்த ,தேசிய மாணவர்கள் அமைப்பு (( National Students Union of India (NSUI)) உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பிரக்யா சிங் தாகூருக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யா சிங் தாக்கூர், “ஒரு எம்பி என்றும் பாராமல் ஒரு பெண் சந்நியாசியை பயங்கரவாதி என்று (NSUI) உறுப்பினர்கள் கோஷமிட்டது பெருங்குற்றமாகும், இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

சமீபத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பிரக்யா சிங் தாக்கூர் சக பயணிகளிடம் அடாவடியாக நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply