பிரபல டிவி நடிகை மர்ம மரணம்!

Share this News:

திருவனந்தபுரம் (25 டிச 2019): கேரளாவில் பிரபல இளம் டிவி நடிகையும், சமையற்கலை நிபுணருமான ஜகீ ஜான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை திருவனந்தபுரத்தின் குரவங்கோனத்தில் உள்ள அவரது வீட்டில் சமயல் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து உடலை மீட்ட போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே உயிரிழப்பு எப்படி நேர்ந்தது என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, ஜகீயின் தாயார் கிரேஸி, வீட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. மகளின் மரணத்தை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவரிடம் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

45 வயதாகும் ஜகீ தொழில் முறையில் சமையல்கலை நிபுணர் ஆவார். அவருக்கு டிவி நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி, மாடல், ஊக்கப் பேச்சாளர், நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு முகங்கள் உண்டு. அவரது மரணம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share this News:

Leave a Reply