ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

Share this News:

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்து போராட்டத்தை சீர்குலைக்க நினைத்ததாக தெரிகிறது. அவரை மடக்கிப் பிடித்த போராட்டக் காரர்கள் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போராட்டம் குறித்து அவ்வப்போது தகவல் வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள், தற்போது சகஜ நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அமைதி வழியில் போராடும் ஷஹீன் பாக் பகுதியில் ஆயுதம் ஏந்தியவர்கள் எவரையும் நாங்கள் அனுமதிப்பதில்லை என்றும் போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்


Share this News:

Leave a Reply