ஜே.பி.நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு!

Share this News:

புதுடெல்லி (20 ஜன 2020): பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

டில்லியில், பாஜக, தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜன.,20) நடந்தது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பொறுப்புகளும் இன்றே அவருக்கு வழங்கப்பட்டது.


Share this News:

Leave a Reply