ஒரு கோடி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவார்கள் – பாஜக தலைவர் பேச்சு!

Share this News:

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக உள்ளவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் செல்வி மம்தாவின் வாக்கு வங்கி குறைந்துபோகும் என தெரிவித்த திரு. திலீப் கோஷ், 2021ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply