நடராஜ் பென்சில் குறித்த விளம்பரம் – உண்மை தன்மை என்ன?

Share this News:

சமூக வலைதளங்களில் நடராஜ் பென்சில்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான சம்பளம் என்ற வேலை விளம்பரம் ஒன்று பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்வோம்.

சமூக வலைதளங்கள் மூலம் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலை மோசடி இது.

நடராஜ் பென்சில்களை பேக்கிங் செய்யும் வேலைக்கு மாதம் 30000 ரூபாய்க்கு மேல் என்பதாக விளம்பரங்கள் வருகின்றன. இது போலி விளம்பரமாகும்.

இந்த போலி விளம்பரங்களில் முதலாளிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண்கள் உள்ளன. வீட்டில் செய்யக்கூடிய எளிய வேலை மற்றும் இல்லத்தரசிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கும்.

ஆனால் நடராஜ் பென்சில்ஸ் நிறுவனமே தங்களது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின் மூலம் இது போன்ற வேலை விளம்பரங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடப்பது வேலை மோசடி என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தவிர இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதில்லை என்றும் கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply