ஷாஜியா மாரி இந்தியாவுக்கு மிரட்டல்!

Share this News:

இஸ்லாமாபாத் (18 டிச 2022): பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஷாசியா மாரி இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.

“பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தேவை ஏற்பட்டால், திரும்பிப் பார்க்காமல் செயல்படுவோம்’ என்று ஷாஜியா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பிரதமருக்கு எதிரான பிலாவல் பூட்டோவின் கருத்துக்களுக்கு OIC (இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு) ஆதரவை பாகிஸ்தானால் பெற முடியவில்லை.

எகிப்து, இந்தோனேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தான் எச்சரிக்கையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டன.


Share this News:

Leave a Reply