ஐதராபாத் என்கவுண்டர் – தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு!

Share this News:

ஐதராபாத் (06 டிச 2019): பெண் மருத்துவர் வன்புணர்வு கொலை வழக்கில் கைதான நான்கு பேரை என்கவுண்டர் செய்த நிலையில் இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

26 வயது பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப் பட்டது.

இந்த கொடூர கொலையில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவத்திற்காக, போலீசாருக்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் கலவையாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மீடியா செய்திகள் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மேலும் உண்மை கண்டறியும் குழுவை என்கவுண்டர் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.


Share this News:

Leave a Reply