ஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை!

Share this News:

லாஸேன் (10 டிச 2019): ஊக்க மருந்து சோதனை மாதிரிகள் தொகுப்பை சேதப்படுத்தி மாற்றி வைத்து முறைகேடுகள் புரிந்ததாக எழுந்த புகாரில், ஒலிம்பிக் உள்பட சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா). உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சா்வதேச போட்டிகளில் பங்கேற்ற ரஷிய வீரா், வீராங்கனைகளின் ஊக்க மருந்து சோதனை மாதிரிகள் குறித்த விவரங்களில் முறைகேடு செய்ததாக ரஷியா மீது புகாா் எழுந்தது.

சோச்சியில் 2014-இல் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்து சோதனைகளில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெற்ாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மாஸ்கோவில் உள்ள ஆய்வகத்தில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் தொகுப்பு விவரங்கள் மறைக்கப்பட்டன. இதுதொடா்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சுதந்திரமாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ரிச்சா்ட் மெக்லாரன் அறிக்கை, அரசு உதவியுடன் நடைபெற்ற ஊக்க மருந்து முறைகேட்டை அம்பலப்படுத்தியது.

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி, 2018 பியன்சாங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளின் போதே ரஷியாவுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என வாடா அமைப்பு வலியுறுத்தியது. இந்த புகாா் எதிரொலியாக ரஷிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (ருஸாடா) மீது 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் மாஸ்கோ ஆய்வகத்தில் இருந்து சேதப்படுத்தப்படாத முழுமையான விவரத் தொகுப்பை வழங்க வேண்டும் என சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில் லாஸேனில் திங்கள்கிழமை நடைபெற்ற வாடா செயற்குழுக் கூட்டத்தில் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க ஒருமனதாகத் தீா்மானிக்கப்பட்டது. 17 உறுப்பினா்களில் 9 போ் ரஷியாவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

எனினும் வாடா விசாரணையில் சிக்காத ரஷிய வீரா், வீராங்கனைகள், 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளில் நடுநிலையான அணியாக பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அரசு அதிகாரிகள் மீது தடை பாதிப்பு இருக்க வேண்டும். ஆனால் வீரா்களோ, நிா்வாகிகள் மீது இருக்கக் கூடாது என சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்தது.

இத்தடையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ரஷியா ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்துக்கு 21 நாள்கள் அவகாசம் உள்ளது. ஆணையத் தலைவா் யூரி முறையீடு செய்ய முடியாத நிலையில், அதன் மேற்பாா்வைக் குழு மேல்முறையீடு செய்யலாம்.

எனினும் மேல்முறையீட்டில் சாதகமான பதிலை எதிா்பாா்க்க முடியாது என யூரி கூறியுள்ளாா். நான்கு ஆண்டுகள் தடை என்பது ஒரு வீரரின் வாழ்வில் முக்கிய தருணமாகும். அப்பாவி வீரா்களின் பங்கேற்பு உரிமையை எவரும் தட்டிப்பறிக்கக் கூடாது என பல்வேறு ரஷிய விளையாட்டு கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இத் தடையால் ரஷிய அதிகாரிகள் ஒலிம்பிக் உள்பட பெரிய போட்டிகளில் பங்கேற்க முடியாது. மேலும் சா்வதேச போட்டிகளை நடத்தவோ அல்லது விண்ணப்பிக்கும் உரிமையையும் இழக்கிறது ரஷியா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனாவைப் போல் விளையாட்டு உலகில் செல்வாக்கு மிக்க பெரிய நாடான ரஷியா மீதான 4 ஆண்டுகள் தடை சா்வதேச விளையாட்டரங்கில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply