இங்கே பிறந்தோம் இங்கேயே மடிவோம் – மக்கள் வெள்ளத்தால் திணறிய ஐதராபாத்!

ஐதராபாத் (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் 40 அமைப்புகளால் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்தது.

பல்வேறு மதத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி, ‘இங்கேயே பிறந்தோம் இங்கேயே மடிவோம்” என்றவாறு கோஷமிட்டனர்.

போராட்டத்தை ஒட்டி ஐதராபாத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply