மிஸ்டு கால் அலப்பறை – அசிங்கப்பட்ட பாஜக!

சென்னை (04 ஜன 2020): மிஸ்டு கால் மூலம் கட்சியை வளர்த்தாக கூறப்பட்ட நிலையில் மிஸ்டு கால் முறை மூலம் அடுத்த அசிங்கத்தை சந்தித்துள்ளது பாஜக.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்ட மிஸ்டு கால் முறையை அறிமுகப்படுத்தியது பாஜக. அதற்காக ஒரு போன் நம்பரையும் அறிமுகப்படுத்தியது. அதை பரப்புவதற்கு சில கீழ்த்தரமான முறைகளை கையில் எடுத்துள்ளது.

ட்விட்டரில் சில பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த போன் நம்பரை பதிவிட்டு, இது ஒரு பெண்ணின் போன் நம்பர் பயன்படுத்திக் கொளுங்கள் என பகிர்ந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் நெட்ஃப்ளிக்ஸ் ஆறு மாதம் இலவசம் என்றெல்லாம் ஏமாற்று வேலையை செய்து மாட்டிக் கொண்டது. இதனை பாஜக ஆதரவாளர்கள் பலரும் பரப்பி அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.

https://i0.wp.com/imagevars.gulfnews.com/2020/01/05/Netflix-replied-to-the-fake-tweet_16f75ec4821_original-ratio.jpg?resize=477%2C357&ssl=1

ஏற்கனவே CAA என்பதற்கு பதிலாக CCA என்று பரப்பி வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதென்று இப்போது இன்னொரு அலப்பறை.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply