முஸ்லிம்களை மிரட்டும் பாஜக எம்.எல்.ஏ! (Video)

Share this News:

பெங்களூரு (04 ஜன 2020): இந்தியாவில் முஸ்லிம்கள் 18 சதவீதம்தான் உள்ளீர்கள் நாங்கள் 80 சதவீதம் உள்ளோம் என்று பாஜக எம்.எல்.ஏ மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

கடும் எதிர்ப்பையும் மீறி, நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கூறி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக எம்.எல்.ஏ சோம சேகர் ரெட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, “இந்த நாட்டில் இந்துக்கள் 80 சதவீதம் உள்ளோம். நீங்கள் 17 சதவீதம் தான். நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். குடியுரிமை சட்டத்தையோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ எதிர்ப்பீர்கள் என்றால் நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்” என்று பேசியுள்ளார்.


Share this News:

Leave a Reply