டெல்லியில் முஸ்லிம் வாக்குகளை இழந்த ஆம் ஆத்மி கட்சி!

Share this News:

புதுடெல்லி (08 டிச 2022): டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றாலும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளை இழந்துள்ளது

2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி தனது முஸ்லிம் வாக்குகளில் 14% மற்றும் தலித் வாக்குகளில் 16% இழந்துள்ளது.

ஜாகிர் நகர், ஷாஹீன் பாக் போராட்டங்கள் நடந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் முஸ்தபாபாத்திலும் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது.

ஜாகிர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் சல்மா கான் காங்கிரஸின் நாஜியா டேனிஷிடம் தோற்றார், அதேபோல ஆம் ஆத்மி கட்சியின் அப்துல் வாஜித் கான் காங்கிரஸின் அரிபா கானிடம் தோற்றார்.

இந்த தேர்தல் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முஸ்லீம் சமூகம் தெளிவாக நிராகரித்ததாக தெரிகிறது

டெல்லி முனிசிபல் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றாலும் வரும் தேர்தல்களை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.


Share this News:

Leave a Reply