வாரிசு குடும்பத்தில் விரிசலா?

Share this News:

சென்னை (23 ஜன 2023): நடிகர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் லடாய் என்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த லடாய்க்குப் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான படம் வாரிசு. கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த படம் ஒருபுறமிருக்க வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பெரும்பாலும் சங்கீதா நடிகர் விஜய்யின் அனைத்து பட ஆடியோ வெளியீட்டிலும் கலந்து கொள்வார். ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மாறாக விஜய்யின் தந்தையும், தாயும் கலந்து கொண்டனர்.  ஆனாலும், பெற்றோரை அவமதிக்கும் வண்ணம் அவர்களைக் காணாதது போல் புறக்கணித்துச் சென்றார் விஜய்.

நடிகர் விஜய்க்கும் அவர் மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை பூதாகரமாகி விட்டது எனவும் இதனாலேயே சங்கீதா ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், விஜய்க்கும் அவருடன் சமீபத்தில் நாயகியாக நடித்த ஒரு பிரபல நடிகைக்கும் இடையே உள்ள “நட்பே”, சங்கீதா – விஜய் விரிசலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. சங்கீதா எவ்வளவு எடுத்து கூறியும் விஜய் கேட்கவில்லையாம். விஜய்க்கு ஆதரவாக இருப்பது அவரது மேனேஜர்தானாம்.

இது இப்படியிருக்க, விஜய் அரசியல் ஆர்வத்தில் இருப்பதால் இந்த விவகாரம் அவரது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் நட்பு வட்டத்தில் உள்ள சிலர், கணவன் – மனைவி இருவருக்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


Share this News:

Leave a Reply