இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை (15 நவ 2021): இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்து கலக்கியிருந்த இதன் இரண்டாம் பாகம் மீண்டும் கமல் நடிக்க விபத்து காரணமாகவும், தயாரிப்பு தரப்பு காரணமாகவும் படபிடிப்பு தடை பட்டிருந்தது. தற்போது ஷங்கர் ராம்சரன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2…

மேலும்...

திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

மேலும்...

நான் உயிரோடு இருக்கும் வரை சங்கருக்கு நீதி வாங்காமல் விடமாட்டேன்: கவுசல்யா!

சென்னை (22 ஜூன் 2020): உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. உடுமலை சங்கர், கெளசல்யா இருவரும் வெவ்வேறு ஜாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். இந்த…

மேலும்...

நானும் செத்துப்போயிருப்பேன் – நடிகர் கமல் உருக்கம்!

சென்னை (20 பிப் 2020): இந்த விபத்தில் நானும் இறந்திருக்கக் கூடும் என்று இந்தியன் 2 படப் பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் கமல் பேட்டியளித்தார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல், கஜல் அகர்வால் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “100 கோடிகள், 200 கோடிகள்…

மேலும்...

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கரம் – மூவர் சாவு!

சென்னை (20 பிப் 2020): கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பூந்தமல்லி அடுத்த EVP பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். கிரேனின் மேல் கட்டப்பட்டிருந்த ராட்சத லைட் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு…

மேலும்...