யுவன் சங்கர் ராஜா இசையில் ஒலிம்பிக் பாடல் – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை (26 ஜூலை 2021): ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசையமைத்த “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலின் மீண்டும் டெல்லி பயணம்!

சென்னை (18 ஜூலை 2021): தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக இன்று மாலை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார். அதேபோல் அண்மையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் தொகை…

மேலும்...

யூடியூப் வருமானத்தில் ரூ 10 லட்சம் கொரோனா நிதி – அசத்திய வில்லேஜ் குக்கிங் சேனல்!

சென்னை (05 ஜூலை 2021): யூடியூப் வருமானத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 10 லட்சம் கொரோனா நிதி வழங்கியுள்ளனர், வில்லேஜ் குக்கிங் சேனல். தமிழ் யூட்யூப் சமையல் சேனல்களில் முதல் முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் சேனல் என்ற பெருமையை தற்போது வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த சேனலை சேர்ந்த குழுவினர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் தந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் வெளியான சூழலில்,…

மேலும்...

திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

மேலும்...

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்….

மேலும்...

இதை செய்தால் ரூ 3 கோடி பரிசு – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

சிறு துரும்பையும் பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள் – ம.செ க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (26 ஜூன் 2021): சென்னை அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தொடர்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசிய போது, சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்…

மேலும்...

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் – பாமகவுக்கு ஸ்டாலின் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜிகே மணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் . இது குறித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொரோனாவை குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்து இருக்கிறோம்….

மேலும்...

சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (22 ஜூன் 2021): 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...