சிறுமி மரணம் இதயமுள்ள எவரையும் துடிக்கச் செய்யும் – ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (11 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி…

மேலும்...

திமுக கூட்டணி கட்சிகள் செய்யவுள்ள காரியம் தெரியுமா?

சென்னை (07 மே 2020): மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பொதுமக்கள்,இன்று, 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’ என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை…

மேலும்...

ஜோதிகாவின் பேச்சு – திமுக வை வம்புக்கு இழுத்த நடிகை!

சென்னை (25 ஏப் 2020): ஜோதிகா கோவில் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், திமுகவையும் இதில் இணைத்து வம்புக்கு இழுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும்போது, “கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறீங்க.. பெயிண்ட அடித்து பராமரிக்கிறீர்கள். அதே போல ஸ்கூல்கலுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்..இவைதான் நமக்கு முக்கியம். அதனால் அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் மற்றும் இந்துத்வாவினர்…

மேலும்...

கொரோனா வைரசும் திமுகவும் – பகீர் கிளப்பும் அமைச்சர்!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகல் – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

சென்னை (16 மார்ச் 2020): திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதால் துரைமுருகன் திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 16-3-2020 கடிதத்தின் வாயிலாக…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரை முருகன் போட்டி!

சென்னை (16 மார்ச் 2020): திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும்…

மேலும்...

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பதவி யாருக்கு?

சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார். அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த…

மேலும்...

பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம்…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் க. அன்பழகன் இன்று (6-3-2020) நலக்குறைவால் காலமானார். க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அது பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மரணமடந்தார். அவருக்கு வயது 98.

மேலும்...