புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை!

சென்னை (14 டிச 2021): கொரோனா நோய் தடுப்பு தொடர்பான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (13 டிச 2021): தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 13.12.2021, 14.12.2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15.12.2021, 16.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான…

மேலும்...

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா? – அமைச்சர் பதில்!

சென்னை (12 டிச 2021): தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 83 புள்ளி 5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 51 புள்ளி 3 சதவீதம் பேர் இரண்டாவது தவணை…

மேலும்...

மழை விட்டும் தூரல் விடாத கதைதான் தக்காளியின் விலை!

சென்னை (08 டிச 2021): சென்னையில் இன்றைய நிலவரப்படி தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்குப் பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளிச் செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது. ஆகவே, தக்காளி…

மேலும்...

வேலூரில் நிலநடுக்கம்!

வேலூர் (29 ஆஆ 2021): வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால்…

மேலும்...

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம்…

மேலும்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை (27 நவ 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு…

மேலும்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (25 நவ 2021): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, கேரளா,…

மேலும்...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி ரூ 85 முதல் 100 வரை விற்பனை!

சென்னை (24 நவ 2021): “பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வெளிச்சந்தையில் தற்போது, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தக்காளி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், இதற்காக தினசரி 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் பண்ணை…

மேலும்...

தமிழகத்தை தொடர்ந்து மிரட்டும் மழை – 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு!

சென்னை (23 நவ 2021): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. -குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். -காற்றழுத்த தாழ்வு…

மேலும்...