கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (05 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 044-29510400 044-29510500 94443 40496 87544 48477 மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.

மேலும்...

மாநில அளவிலான கபடி போட்டி – வீடியோ!

கரூர் (03 மார்ச் 2020): கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசை கரூர் அணி தட்டிச் சென்றது. வெற்றி லெற்ற அணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து பரிசுகளை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நேற்று மாலையில் துவங்கியது. இந்த போட்டிகளில் சென்னை, கரூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் எடப்பாடி பதில்!

திருச்சி (26 பிப் 2020): தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திருச்சியில் முக்கொப்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “கதவணை கட்டுமான பணியில் 35 % பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 484 பைல்களில் ( தூண்களில் ) தற்போது வரை…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் – மசோதா தாக்கல்!

சென்னை (20 பிப் 2020): காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் அதன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். பிற்பகல் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் நடைபெற்ற பேரணி – வீடியோ தொகுப்பு!

சென்னை (20 பிப் 2020): இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் தமிழகமெங்கும் பிப்ரவரி 19 அன்று பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்…

மேலும்...

நிறைவேற்று நிறைவேற்று தீர்மானம் நிறைவேற்று – ஸ்தம்பித்த தமிழகம்!

சென்னை (19 பிப் 2020): இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டம் தடையை மீறி சட்டசபையை முற்றுகையிட முயற்சி செய்து போராடி வருகிறார்கள். இந்த சூழலில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக நடப்பு சட்டசபை கூட்டதொடரிலேயே குடியுரிமை…

மேலும்...

ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் ஓபிஎஸ் என்ன மாடுபிடி வீரரா? – துரைமுருகனின் காமெடி கலாட்டா!

சென்னை (19 பிப் 2020): விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார்.

மேலும்...

தமிழகத்தில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம்…

மேலும்...