அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் இணைந்தார்!

சென்னை (18 ஆக 2020): அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன், “தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாத்துக்கொண்டிருக்கிற கட்சி திமுக. ஆளுமைமிக்க தலைமையின் கீழ் பணியாற்றவே திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். மேலும் “கொரோனா காலத்தில் கூட அதிமுகவில்…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (09 ஆக 2020): திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க உள்ளனர் என்றும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் , “கடந்த சில…

மேலும்...

அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள…

மேலும்...

திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், “ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம்…

மேலும்...

கொரோனாவால் தந்தையை இழந்த மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி!

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்!

செங்கல்பட்டு (12 ஜூலை 2020): திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த இதயவர்மனுக்கும், திருப்போரூர் நகரில் செங்கேணி அம்மன் பகுதியில் வசிக்கும் குமாருக்கும் தகராறு இருந்துள்ளது. குமார் அந்தப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் சுற்றளவுக்கு பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் குமாரின் பிளாட்டிற்கு செல்ல பொது வழி பாதை சற்று…

மேலும்...

பாஜகவில் முன்னாள் திமுக நிர்வாகி – இன்றைய செய்தித் துளிகள்!

சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. சாத்தான்குளம் காவல்நிலையம் விசாரணைக்காக ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தடயவியல்துறையினர் ஆவணங்களை சேகரித்ததையடுத்து காவல்நிலையம் விடுவிப்பு. நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு. கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு…

மேலும்...

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம்: திமுக வழங்கல்!

சென்னை (27 ஜூன் 2020):சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ 25 லட்சம் வழங்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைவிட கொடூரமான முறையில் தமிழக காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான…

மேலும்...

கனிமொழி வீட்டுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை (25 ஜூன் 2020): திமுக எம்பி கனிமொழி வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெற்ற் நிலையில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும், தூத்துக்குடி திமுக எம்.பி-யுமான கனிமொழி வீட்டிற்கு தினமும் ஒரு தலைமை காவலர் மற்றும் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை இரவோடு இரவாக தமிழக காவல்துறை திரும்ப பெற்றது. திமுக எம்.பி கனிமொழிக்கு…

மேலும்...