மணமக்களை வித்தியாசமாக வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மணமக்கள் பெரியார் போல் வாழ்க என வாழ்த்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழா சென்னை கோபாலபுரம் அருகே உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அபோது பேசிய ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள…

மேலும்...

குடியரசு தினம் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றினார்!

சென்னை (26 ஜன 2020): குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத்…

மேலும்...

சென்னையிலும் ஷஹீன் பாக் – பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

சென்னை (24 ஜன 2020): சென்னையில் டெல்லி ஷஹீன் பாக்கைப் போன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனை!

சென்னை (23 ஜன 2020): கொரொனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில் சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உடல் பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால் உயிரை பறிக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது வரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளில்…

மேலும்...

சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ காப்பி சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

சென்னை (18 ஜன 2020): சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ தயாரிப்பவர் பால் காய்ச்ச கழிவரைக்கு உபயோகிக்கும் நீரை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஊழியர் ரெயில் கழிவரைக்கு பயன்படுத்த செல்லும் நீரை பிடித்து அதில் பால் காய்ச்சுவது போன்று உள்ளது. இதற்கிடையே அந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஒரே நாளில் சென்னையை அதிர வைத்த இரண்டு சம்பவங்கள்!

சென்னை (15 ஜன 2020): ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் சென்னையை அதிர வைத்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28), பெயின்டர் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் வேலை செய்துவந்தார். நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் உறவினர்கள் யுவராஜைத் தேடினர். அப்போது கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை…

மேலும்...

சென்னை மக்களுக்கு குளு குளு செய்தி!

சென்னை (10 ஜன 2020): சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்று (10.01.2020) முதல் இயக்கப்படுகின்றது. குளிர் சாதனப் பேருந்தினை நேற்று (09.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டனர். நவீன முறையில், நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த…

மேலும்...
போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - பரிதவிக்கும் துபாய் கணவன்!

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக…

மேலும்...

ஆபாச வீடியோவை காட்டி சிறுமியிடம் சில்மிஷம் – கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

சென்னை (07 ஜன 2020): ஆபாச வீடியோவைக் காட்டி 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 68 வயது அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி… 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின்…

மேலும்...