நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

உதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்!

சென்னை (25 அக் 2020): சென்னை அண்ணா அறிவாலயத்தின் வாசலில் , ‘ஸ்டாலின் வாழ்க; உதயசூரியன் ஒழிக’ என திமுக தொண்டர்கள் சிலர் கோஷம் எழுந்திருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குமரகுருவுடன் திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க கிழக்கு ஒ.செ துரைராஜும், கள்ளக்குறிச்சி தி.மு.க மா.செ உதயசூரியனும், நெருக்கமாக இருப்பதாகவும் இதனால்தான் குமரகுரு மூன்று முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்றும் அந்தப் பகுதி தி.மு.க.வினருக்கு நீண்ட நாட்களாக கோபம். இந்த விவகாரத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்காக…

மேலும்...

பெண்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை (24 அக் 2020): பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும்…

மேலும்...

ஆயுத பூஜை விற்பனை மந்தம் – வியாபாரிகள் கவலை!

சென்னை (24 அக் 2020): ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கான புஜைப் பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவாக ஆயுதபூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மேலும் துலங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஆயுதபூஜை அன்று, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, தோரணம் கட்டி, பொரி, பழங்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம்….

மேலும்...

முதலில் திமுக ஆட்சி – அடுத்து நீட்டுக்கு தடை : ஸ்டாலின்!

சென்னை (24 அக் 2020): திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: -நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம்…

மேலும்...

தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கோவிட் 19 தடுப்புஊசி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

புதுக்கோட்டை (22 அக் 2020): கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி…

மேலும்...

தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது – லண்டன் நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

லண்டன் (22 அக் 2020): தடுப்பூசியால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது. தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு!

சென்னை (22 அக் 2020) எடப்பாடி தாயார் மரணித்ததையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா இரங்கலை தெரிவித்துக்கொண்டார்,. இச்சந்தித்தின்போது மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலளார் முனைவர் ஜெ. ஹாஜா கனி. தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணஙகுடி ஆர் எம் அனிபா ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும்...

நவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்!

ஜித்தா (20அக் 2020): சவூதி அரேபியாவில் நவம்பர் 15 முதல் குளிர்கால கொண்டாட்டத்திற்கு சவுதி சுற்றுலா ஆணையம் தயாராகி வருகிறது. சவுதியின் 18 இடங்களில் நடத்தப்படும் இந்த குளிர்கால கொண்டாட்டம் நவம்பர் 15 முதல் 2021 ஏப்ரல் 30 வரை பெரிய அளவில் நடைபெறும் என கூறப்படுகிறது. சவூதி கோடைகால கொண்டாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கா, மதீனா, ஜெட்டா, ரியாத், தைஃப், அல்-கோபர், அல்-அஹ்ஸா, தம்மம், அபா, ஜசான், அல்-பஹா அலுலா,…

மேலும்...

விஜய்சேதுபதி விவகாரத்தில் நச்சுக்கருத்து – அமீர் கண்டனம்!

சென்னை (21 அக் 2020): நடிகர் விஜய் சேதுபதி மக்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தத விவகாரத்தில் இயக்குனர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம், நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய (சட்டம் அனுமதித்த) தொழிலை செய்வதற்கும்…

மேலும்...