பட்டுக்கோட்டை வாலிபர் வெளிநாட்டில் மரணம்!

Share this News:

பட்டுக்கோட்டை (03 பிப் 2023): வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் – கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியா விற்கு வேலைக்கு சென்றார்.

அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நல க்குறைவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலையறிந்த கார்த்திக்கின் பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் மகன் வேலைக்கு சென்றான். ஆனால் அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறினார்கள்.

இந்த அதிர்ச்சியை எங்களால் தாங்கவே முடியவில்லை. எங்கள் மகன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் மலேசியா நாட்டில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply