வேறொரு பெண்ணுடன் கள்ள காதல் – திமுக பிரமுகர் மீது மனைவி பரபரப்பு புகார்!

Share this News:

சென்னை (22 பிப் 2020): வேறொரு பெண்ணுடன் கணவருக்கு கள்ள உறவு இருப்பதாக திமுக பிரமுகர் மீது அவரது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை: “என் கணவரை விட 15 வயசு பெரியவங்க அவங்க.. அக்கா, அக்கான்னு கூப்பிட்டார்.. கடைசியில 2 பேருக்கும் கள்ள உறவு இருந்திருக்கு… அவருடன் சேர்ந்து என் கணவர் கும்மாளம் அடிக்கிறார்.. இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்’ என, திமுக நிர்வாகியின் மனைவி ரம்யா சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா.. 28 வயதாகிறது. இவர் கமிஷனரிடம் அளித்த புகாரில், நானும் வாணியம்பாடி திமுக செயலாலர் சரதி குமாரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்ரவரி 10ல் கல்யாணம் செய்தோம்; 2 வயசில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் என்னை கல்யாணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலம் சட்ட கல்லுாரியில் படித்தபோது, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யபிரியாவுக்கு கல்யாணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர்.

இருந்தாலும், என் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனக்கு வரதட்சணையாக தந்த 140 சவரன் நகை, 20 லட்சம் ரூபாயை கள்ளக் காதலியிடம் என் கணவர் கொண்டு போய் கொடுத்தார்.. அந்த சமயம் நான் கர்ப்பமானேன்.. என் தாய் வீட்டிற்கும் பிரசவத்துக்கு அனுப்பவில்லை.. என் கணவர், அரசியல் பிரமுகர் என்பதால்.. அவர் பதவி, குடும்ப கவுரவம் கருதி, வெளியில் சொல்லாமல் இருந்தேன்.

எனக்கு பிரசவம்கூடசத்யபிரியாவின் வீட்டில் தான் நடந்தது.. அங்கு இருக்க பிடிக்காமல், 2 நாளில் வாணியம்பாடிக்கு வந்து விட்டேன். என் கணவருக்கு, சத்யபிரியா மட்டுமின்றி, வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதால், பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.. உயிருக்கு பயந்து, தற்போது, சென்னை, அடையாறில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளேன்.” என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர் மீது அவரது மனைவியே அளித்துள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply