தொண்டர்கள் மத்தியில் விஜய்காந்த் உருக்கமான பேச்சு!

Share this News:

தமக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமது முதல் கடவுள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பிறகு மேடையில் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார்.

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று பேசியவர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்று தான் என்றும் குறிப்பிட்டார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டதாகக் கூறிய பிரேமலதா, அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களைப் பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரேமலதாவுக்குப் பின்னர் மேடையில் பேசிய விஜயகாந்த், தமக்காகப் பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்கள் தான் தமது முதல் கடவுள் என்றும், விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வருவேன் என்றும் உருக்கம் தெரிவித்தார். தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் விஜயகாந்த் பகிர்ந்து கொண்டார்.


Share this News:

Leave a Reply