தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

Share this News:

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப் போவதாக பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதிலும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களையும் திருப்திபடுத்த வேண்டிய சூழலில் கட்சித் தலைமை உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலினால் நியமனம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பாக செயல்படும் பல எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில இலாக்களின் செயல்படாத அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அமைச்சர் பதவியில் அதிருப்தியில் இருக்கும் ஐ.பெரியசாமியின் துறையும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சிவி கணேசன், மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், சக்கரபாணி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் துறைகளிலும் மாற்றம் இருக்கும் எனவும் அமைச்சரவை மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த பட்டியலானது வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Share this News:

Leave a Reply