சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

Share this News:

சென்னை (04 பிப் 2020): சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்

இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் பரப்பினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கல்லூரிகளுக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடியும் வருகின்றனர்.

மேலும் ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றன.


Share this News:

Leave a Reply