குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் நிறைவேறியது!

Share this News:

புதுச்சேரி (12 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply