எட்டு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

Share this News:

சிவகாசி (23 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியினரின் மகள் பிரித்திகா. மூன்றாவது படித்து வந்த இந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவா் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை அழைப்புக்காகச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கொங்கலாபுரத்தில் ஒரு புதரில் சிறுமி சடலமாகக் கிடந்தாள். இதுகுறித்து சிவகாசி நகா் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக அந்தப் பகுதியில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞர் வியாழன் மதியம் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமியின் சடலம் கிடந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரிக்கும்போதுதான் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது தெரிய வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply