அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

Share this News:

சென்னை (14 டிச 2022): அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரபிக்கடல் பகுதியில் கேரளா,கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 14-ம் தேதி (இன்று) முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.


Share this News:

Leave a Reply