சென்னை மைசூர் வந்தேபாரத் ரெயில் மீது கன்றுகுட்டி மோதி ரெயில் பழுது!

Share this News:

சென்னை (18 நவ 2022): மைசூரு- பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் பழுதடைந்தது. இந்த விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.

விபத்து ஏற்பட்ட போது ரயில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னைக்கு பயணத்தை துவங்கியது.

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏ ஏழுமலை கூறுகையில் “கன்றுக்குட்டியின் உரிமையாளரைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து கடும் அபராதம் விதிக்க யோசித்து வருகிறோம். , பாதையில் கால்நடைகளை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மக்களை எச்சரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

ஏற்கனவே அகமதாபாத்தில் வந்தேபாரத் விரைவு ரயில் எருமைகள் மீது மோதிய விபத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply