விரைவில் பாஜகவிலிருந்து விலகுவோம் – அமைச்சர் அதிரடி!

Share this News:

இளையான்குடி (22 ஜன 2020): “பாஜகவில் இருந்து அதிமுக விரைவில் விலகும்!” என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், அதிமுக பாஜகவிடமிருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.

நாங்கள் சாதாரண மனிதர்கள்; நீங்கள் எங்களை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். எம்எல்ஏ, சேர்மன் மற்றும் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம். ஆனால், காங்கிரசையும் திமுகவையும் இதுபோல கேட்க முடியுமா, சந்திக்க முடியுமா? நாங்கள் பாஜகவிலிருந்து விலகினாலும் நீங்கள் திமுகவை மட்டுமே நம்புவீர்கள்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Share this News:

Leave a Reply