தமிழ் பேராசிரியர் சாயபு மரைக்காயருக்கு கவுரவம் – இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியீடு!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): தமிழ்துறை பேராசிரியர் சாயபு மரைக்காயர் பெயரில் இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

சாயபு மரைக்காயர், காரைக்காலில் பிறந்தவர். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், முதுகலை தமிழ்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர், கலைமாமணி விருது பெற்றவர், பல்வேறு புத்தகங்கள் எழுதியவர்.

மேலும் இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து உலகலாவிய மாநாடுகளை நடத்தி புகழ் பெற்றவர்.

அவரது தமிழ் தொண்டினைப் போற்றும் வகையில் இந்திய அஞ்சல் துறை ஐந்து ரூபாய் மதிப்பு மிக்க அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப் படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply