டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி படுகொலை!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறையில் புலணாய்வு அதிகாரி அங்கிட் ஷர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் அங்கிட் சர்மா. பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இன்று காலை அவரது உடலை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து கலவரம் மூண்டுள்ளது.

மேலும் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் கலவரத்தை தூண்டும் பேச்சும் கலவரத்துக்கு வித்திட்டுள்ளது.

இந்த வன்முறையில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஒரு தலைமை காவலர் உயிரிழந்த நிலையில் இன்னொரு அதிகாரி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply